​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விஷ்ணுப்பிரியா கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என அவரது தந்தை புகார்

Published : Dec 06, 2018 4:47 PM

விஷ்ணுப்பிரியா கொலை வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்கவில்லை என அவரது தந்தை புகார்

Dec 06, 2018 4:47 PM

டி.எஸ்.பி விஷ்ணுப்பிரியா வழக்கை சி.பி.ஐ முறையாக விசாரிக்கவில்லை என அவரது தந்தை நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டி.எஸ்.பியாக பணியாற்றிய விஷ்ணுப்பிரியா கடந்த 2015ஆம் ஆண்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, தனிப்பட்ட காரணங்களால்தான் விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதாகக் கூறி வழக்கை கைவிடுவதாக அறிவித்தது.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த விஷ்ணுப்பிரியாவின் தந்தை ரவி, சிபிஐ முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் 5 காவல்துறை உயரதிகாரிகள் உட்பட 7 பேரை நீதிமன்றத்தில் மீண்டும் விசாரிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.

இதனையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி நாகராஜன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.