​​ புயல் பாதிப்பு பகுதிகளில் மரங்களை வெட்டி அகற்ற கருவிகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட உள்ளது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புயல் பாதிப்பு பகுதிகளில் மரங்களை வெட்டி அகற்ற கருவிகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட உள்ளது

Published : Dec 06, 2018 3:50 PM

புயல் பாதிப்பு பகுதிகளில் மரங்களை வெட்டி அகற்ற கருவிகள் வாங்குவதற்கான டெண்டர் கோரப்பட உள்ளது

Dec 06, 2018 3:50 PM

புயல் பாதித்த மாவட்டங்களில் சாய்ந்த மரங்களை விரைவாக வெட்டி அகற்றுவதற்காக 7 கோடியே அறுபது இலட்ச ரூபாய் ரூபாய் மதிப்பில் கருவிகள் வாங்குவதற்காகத் தமிழக அரசு டெண்டர் கோர உள்ளது.

புயல் பாதித்த மாவட்டங்களில் இலட்சக்கணக்கான மரங்களும் தென்னைகளும் சாய்ந்தன. இந்த மரங்களை விரைவாக வெட்டி அகற்றுவதற்காக 500 ஹெவி டூட்டி செயின்சா, 20 விஞ்ச் மெசின்கள், 20 உட் ஸ்பிலிட்டர் மெசின்கள், 20 ஷ்ரெட்டர் கம் பல்வரைசர், 20 டிராலியுடன் இணைந்த ஹெவிடூட்டி உட் சிப்பர் மெசின்கள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்ய வேளாண்துறை திட்டமிட்டுள்ளது.

தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இதற்கு 7 கோடியே 60 இலட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருவிகளைக் கொள்முதல் செய்வதற்காக வேளாண் பொறியியல் துறைத் தலைமைப் பொறியாளர் மூலம் டெண்டர் கோரப்பட உள்ளது. இதற்கான அரசாணையை வேளாண்துறை வெளியிட்டுள்ளது.