​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வு

Published : Dec 06, 2018 3:39 PM

வனவர், வனக்காப்பாளர் உள்ளிட்ட வனத்துறை பணியிடங்களுக்கான தேர்வு

Dec 06, 2018 3:39 PM

தமிழகத்தில் வனவர் பணியிடங்களுக்கான இணையவழித் தேர்வுகள்  தொடங்கியுள்ளன.

தமிழ்நாடு வன சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் தேர்வுகளை நடத்துகிறது. தமிழக வனத்துறையில் காலியாக உள்ள 300 வனவர் பணியிடங்களுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரத்து 782 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

மேலும், 878 வனக் காப்பாளர் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன்கூடிய வனக்காப்பாளர் பணியிடங்களுக்கு, 98 ஆயிரத்து 801 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில், வனவர் பணியிடங்களுக்கு இன்று தொடங்கியுள்ள தேர்வு, 9 -ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

வரும் 10 மற்றும் 11-ஆம் தேதிகளில் வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளருக்கான தேர்வு நடைபெறுகிறது. வனவர் தேர்வுக்காக தமிழகம் முழுவதும் 139 மையங்களும், வனக்காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் தேர்வுக்காக 122 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

தேர்வுகளை எழுதுபவர்கள், கட்டாயம் ஆடை கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டுமென்றும், ஆதார், ரேஷன் கார்டு  உள்ளிட்ட ஏதேனும் ஒரு அடையாள அட்டையை எடுத்து வர வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.