​​ புனே நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மாதுரி தீட்சித்?
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புனே நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மாதுரி தீட்சித்?

Published : Dec 06, 2018 3:23 PM

புனே நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் மாதுரி தீட்சித்?

Dec 06, 2018 3:23 PM

வருகிற நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதியின் பாஜக வேட்பாளராக, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித், களம் இறக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏக் தோன் தீன் பாடல் மூலம், நாடு முழுவதும் பிரபலம் ஆனவர், நடிகை மாதுரி தீட்சித்... ஆதரவுக்கான சந்திப்பு என்ற பெயரில் பிரபலங்களை சந்திக்கும் நிகழ்வை, பாஜக முன்னெடுத்து வருகிறது. இந்த வகையில், கடந்த ஜூன் மாதம், மும்பையில், பாஜக தலைவர் அமித் ஷா, பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித்தை சந்தித்தார்.

இந்நிலையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில், புனே தொகுதி வேட்பாளராக, நடிகை மாதுரி தீட்சித்தை, களமிறக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.