​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ திருமாவளவன் உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு பதிவு

Published : Dec 06, 2018 3:16 PM

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட வைகோ திருமாவளவன் உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு பதிவு

Dec 06, 2018 3:16 PM

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்துக்குத் திரண்ட வைகோ திருமாவளவன் உள்ளிட்ட 687 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் கொலை வழக்கில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரின் விடுதலையை வலியுறுத்தி கடந்த 3-ஆம் தேதி வைகோ, திருமாவளவன், கி.வீரமணி, ரா.முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன், உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் ஆளுநர் மாளிகையை ஒட்டியுள்ள சாலையில் திரண்டு முழக்கங்களை எழுப்பினர் தடையை மீறி போராட்டம் நடத்திய அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட 687 பேர் மீது சைதாப்பேட்டை காவல் நிலைய போலீசார் போக்குவரத்துக்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.