​​ திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல விரைவில் தடை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல விரைவில் தடை

Published : Dec 06, 2018 2:48 PM

திம்பம் மலைப்பாதையில் கனரக வாகனங்கள் செல்ல விரைவில் தடை

Dec 06, 2018 2:48 PM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை அதிக பாரம் ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் கூறினார்.

தமிழக - கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களுரு தேசிய நெடுஞ்சாலையில் அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டைஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை உள்ளது.

24 மணி நேரமும் போக்குவரத்து நடைபெறும் இப்பாதையில் அதிக பாரம் ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் அவ்வப்போது பழுதாகி நிற்பது வழக்கம். இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

இதனை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்னும் 15 நாட்களில் 12 சக்கரங்களுக்கு மேல் உள்ள வாகனங்கள் மலைப்பாதை வழியே செல்ல தடைவிதிக்கப்படுவதோடு, மாலை 6 மணி முதல் காலை 6 மணிவரை அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனங்களும் செல்ல தடை விதிக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்தார்.