​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நெல் ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Published : Dec 06, 2018 2:04 PM

நெல் ஜெயராமன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல்

Dec 06, 2018 2:04 PM

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில்,  மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி, மிளகுசம்பா, குண்டு கார் உள்ளிட்ட 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து, விவசாயிகளிடையே பிரபலபடுத்தியவர் நெல் ஜெயராமன் என புகழாரம் சூட்டியுள்ளார். அவரது மறைவுச்செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர்  தெரிவித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான வேளாண் பெருமக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்திய பெருமைக்குரியவர் நெல் ஜெயராமன் எனவும், அவரது சேவையை அங்கீகரித்து தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிதி அளித்ததையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும், வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பு எனக் கூறியுள்ள முதலமைச்சர், அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.