​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜனவரி 1 முதல் மாருதி நிறுவனங்களின் கார் விலை உயர்வு

Published : Dec 05, 2018 8:18 PM

ஜனவரி 1 முதல் மாருதி நிறுவனங்களின் கார் விலை உயர்வு

Dec 05, 2018 8:18 PM

வரும் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக மாருதி நிறுவனம் அறிவித்துள்ளது.

உற்பத்தி செலவு அதிகரிப்பு, ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் இழப்பை சரிகட்டும் விதத்தில் விலையை உயர்த்த இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே இசுசு மோட்டார்ஸ், டொயட்டோ நிறுவனங்கள் ஜனவரி ஒன்று முதல் கார்கள் விலையை உயர்த்துவதாக அறிவித்ததை தொடர்ந்து தற்போது மாருதி நிறுவனமும் அறிவித்துள்ளது.

எவ்வளவு சதவீதம் விலை உயர்த்தப்பட உள்ளது என்று தெரிவிக்காத நிலையில், வாகனங்களுக்கு ஏற்ப விலை உயர்வு இருக்கும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே போன்று மற்ற நிறுவனங்களும் கார்களின் விலையை உயர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.