​​ மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம்

Published : Dec 05, 2018 5:57 PM

மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம்

Dec 05, 2018 5:57 PM

மத்திய அரசின் சாட்சிகள் பாதுகாப்பு வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த உச்சநீதிமன்றம் அனைத்து மாநிலங்களும் அமல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

ஆசாராம் பாபுவின் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் குறித்து வழக்கில் சாட்சிகளுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணையில் பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கேகே வேணுகோபால், சாட்சிகள் பாதுகாப்புத் திட்ட வரைவு மசோதா தயாராக இருப்பதாகவும், நாடாளுமன்றத்தின் மூலம் அதைச் சட்டமாக்கும் வரை, மாநிலங்கள் அமல்படுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரினார்.

இதனை உச்சநீதிமன்றம் ஏற்று மசோதாவுக்கு ஒப்புதல் அளித்ததுடன் மாநிலங்களும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டது. அதன்படி, 3 வகையாக அச்சுறுத்தல் வகைப்படுத்தப்பட்டு, சாட்சிகளுக்கான பாதுகாப்பு வழங்கப்படுகிறது. விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட நபரும்-சாட்சியும் நேருக்கு நேர் சந்திக்காமலிருப்பதை உறுதிப்படுத்தும் அம்சமும் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளது.