​​ சிபிஐ தலைமை அதிகாரிகள் இருவரும் பூனைகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டதால் விடுப்பில் அனுப்பப்பட்டனர்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சிபிஐ தலைமை அதிகாரிகள் இருவரும் பூனைகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டதால் விடுப்பில் அனுப்பப்பட்டனர்

Published : Dec 05, 2018 5:27 PM

சிபிஐ தலைமை அதிகாரிகள் இருவரும் பூனைகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டதால் விடுப்பில் அனுப்பப்பட்டனர்

Dec 05, 2018 5:27 PM

சிபிஐயின் தலைமை அதிகாரிகள் 2 பேரும் பூனைகளைப் போல் சண்டையிட்டுக் கொண்டதால், அவர்களை விடுப்பில் அனுப்பியதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சிபிஐ தலைமை இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவரும் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து மோதிக் கொண்டதால், அவர்கள் இருவரையும் விடுப்பில் அனுப்பிய மத்திய அரசு இடைக்கால இயக்குனரையும் நியமித்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், சிபிஐ தலைமை அதிகாரிகள் இருவரும் பூனைகளைப் போல் மோதிக்கொண்டதால் அசாதாரணமான சூழல் ஏற்பட்டதாக கூறினார். எனவே, மக்கள் மத்தியில் சிபிஐக்கு இருக்கும் நன்மதிப்பை காக்கும் விதத்தில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டதாக அவர் விளக்கம் அளித்தார். மத்திய கண்காணிப்பு ஆணையம் புகாரை விசாரித்து முடிவு எடுக்கும் வரையில், அதிகாரிகள் இருவரின் அதிகாரத்தையும் பறித்து விடுப்பில் அனுப்பியதாக வேணுகோபால் தெரிவித்தார்.