​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Published : Dec 05, 2018 5:06 PM

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

Dec 05, 2018 5:06 PM

ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் மாற்றமின்றி 6 புள்ளி 5 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு கூட்டம் கடந்த 3 நாட்களாக மும்பையில் நடைபெற்றது.

அந்த கூட்டத்திற்குப் பின் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 6 புள்ளி இரண்டு ஐந்து சதவீதமாகம் மாற்றமின்றி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது காலாண்டில் ஜிடிபி எனப்படும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 1 சதவீதமாக குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் இதுவரை 2 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரித்து வருவதால், அதில் ஏற்படும் குறைகளை தீர்க்கும் விதத்தில் தீர்ப்பாயத்தை அமைக்கவும் ரிசர்வ் வங்கி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

2019 - 2020 ஆம் ஆண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 7 புள்ளி 4 சதவீதமாகவும், நடப்பு ஆண்டின் இரண்டாவது அரையாண்டில் பணவீக்கம் 3 புள்ளி 2 சதவீதமாக இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி கணித்துள்ளது.