​​ வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்

Published : Dec 05, 2018 4:51 PM

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு குறித்து உயர்நீதிமன்றத்தில் தகவல்

Dec 05, 2018 4:51 PM

வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, வழக்குத் தொடர்ந்த டிராபிக் ராமசாமி, எந்த ஒரு வாகனத்தையும் இயக்கும் வாகன ஓட்டிகளும் வாகனத்தை ஓட்டும்போது அசல் ஓட்டுனர் உரிமத்தை தன்னுடன் வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வில் புதன்கிழமையன்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிப்பர் லாரி ஓட்டுனர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வாகன ஓட்டிகள் அசல் அல்லது டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது கட்டாயம் என மத்திய அரசு கடந்த நவம்பர் மாதம் 19ஆம் தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மனுதாரர் கோரிக்கைத் தொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், இந்த வழக்கை மேற்கொண்டு விசாரிக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய நீதிபதிகள், வாழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.