​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோக்லி: லெஜன்ட் ஆஃப் த ஜங்கிள் படத்தின் பிரத்யேக திரையிடல்

Published : Dec 05, 2018 12:39 PM

மோக்லி: லெஜன்ட் ஆஃப் த ஜங்கிள் படத்தின் பிரத்யேக திரையிடல்

Dec 05, 2018 12:39 PM

மோக்லி: லெஜன்ட் ஆஃப் த ஜங்கிள் படத்தின் முக்கியப் பிரமுகர்களுக்கான பிரத்யேகக் காட்சி லண்டனில் திரையிடப்பட்டுள்ளது.

1894-ம் ஆண்டு ரூட்யார்ட் கிப்லிங்-ஆல் எழுதப்பட்ட த ஜங்கில் புக் கதையைத் தழுவிய இப்படம், இந்தியக் காடுகளில் விலங்குகளுடன் வளரும் மனிதக் குழந்தை மோக்லியை மையமாகக் கொண்டது. மோக்லி கதாப்பாத்திரமாக அமெரிக்க வாழ் இந்தியச் சிறுவன் ரோஹன் சந்த் நடித்துள்ளார்.

வனத்துக்கும்-மனித இனத்துக்கும் இடைப்பட்ட உலகில் தடுமாறும் சிறுவனின் படத்துக்கு லண்டன் பிரீமியர் திரையிடலில் சிறப்பான வரவேற்பு கிடைத்தது.