​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சினிமா வாய்ப்புக்காக சறுக்கிய நடிகைகள்..! அதிர்ச்சியில் திரை உலகம்

Published : Dec 05, 2018 6:37 AM



சினிமா வாய்ப்புக்காக சறுக்கிய நடிகைகள்..! அதிர்ச்சியில் திரை உலகம்

Dec 05, 2018 6:37 AM

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி 20 க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையுடன் விளையாடிய துணை நடிகர்கள் ஏஜெண்ட் ஒருவர், தனது வீட்டில் ரகசிய காமிரா பொருத்தி பதிவு செய்த காட்சிகளை, பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வெளியிட்டுள்ளது தமிழ் திரையுலகத்தை அதிரவைத்துள்ளது.

முதலில் சுசீ லீக்ஸ்... அடுத்து ஸ்ரீரெட்டி ட்வீட்..... பின்னர் மீடூ..... என்று கலங்கிக் கிடந்த தமிழ் திரை உலகை அதிர வைத்திருக்கிறது துணை நடிகை ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டுள்ள இந்த ரகசிய காமிரா காட்சிகள்..!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி 20க்கும் மேற்பட்ட பெண்களின் வாழ்க்கையில் விளையாடியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பவர் முன்னணி துணை நடிகர் ஏஜெண்டாக உள்ள கேஸ்டிங் மோகன்...! புதிய படத்தில் நடிக்க நடிகைகள் தேவை என முகநூலில் விளம்பரம் வெளியிடுவது மோகனின் வழக்கம் என்றும், அப்படி வாய்ப்பு கேட்டு வரும் பெண்களை மது அருந்தச் செய்து ஆடவைத்து ரசிப்பது இவரது வாடிக்கை என்றும் கூறப்படுகிறது

கேஸ்டிங் மோகன் தனது படுக்கை அறையில் ரகசிய காமிராவை பொருத்தி வாய்ப்புக் கேட்டு வரும் நடிகைகளை ஆபாசமாக படம்பிடித்ததாக குற்றஞ்சாட்டுகிறார் அவரால் பாதிக்கப்பட்டதாக கூறும் துணை நடிகை மித்ரா..!

ரகசிய காமிராவில் எடுக்கப்பட்ட இந்த வீடியோக்களை கேஸ்டிங் மோகன் மட்டுமல்லாமல், தமிழ் திரை உலகினர் பலரும் இருக்கின்ற வாட்ஸ் ஆப் குரூப்பில் மித்ரா பதிவிட்ட அடுத்த நொடி பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதில் சிலருக்கு தெரிந்த பெண்கள் வீடியோவில் பதிவாகி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர்

இந்த வீடியோ காட்சிகள் அனைத்தும் தனக்கு தெரியாமல் தனது செல்போனில் இருந்து ஹேக் செய்து திருடப்பட்டவை என்றும், தனது அறையில் ரகசிய காமிரா பொருத்தப்பட்டிருப்பது தனக்கே தெரியாது என்றும் மறுத்துள்ளார் துணை நடிகர் ஏஜெண்ட் கேஸ்டிங் மோகன்

அதில் ஒரு வீடியோவில் கேஸ்டிங் மோகன், அந்த காமிராவை நோக்கி பார்க்கும் காட்சிகள் பதிவாகி இருப்பதால் பலரது அந்தரங்கத்தை படம் பிடிப்பதற்காக அவரே அதனை பொருத்தி இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

மீடூ புகாரில் பெண்கள் பாலியல் புகார் கூறியபோது ஆதாரம் இருக்கிறதா ? என்று கேட்டு தங்களை சத்தியவான்களாக சிலர் காட்டிக் கொண்ட நிலையில், திருடனுக்கு தேள் கொட்டியது போல ரகசிய காமிரா காட்சியுடன் சிக்கி இருக்கிறார் கேஸ்டிங் மோகன் என்கின்றனர் விபரம் அறிந்த திரை உலகினர்.

அதே நேரத்தில் எங்கே தாங்கள் தொடர்பான காமிரா காட்சிகள் எதேனும் இருக்க கூடுமோ? என்ற அச்சத்தில் உறைந்து போயுள்ளனர், மோகனுடன் வியாபார தொடர்பில் இருந்த சில உல்லாச விரும்பிகள்..!

கேஸ்டிங் மோகனின் அத்துமீறலை ஆதாரங்களுடன் காவல்துறையில் விரிவான புகாராக அளிக்க உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.