​​ பிரபல ஊட்டச்சத்து பான நிறுவனமான ஹார்லிக்ஸ் கைமாறியது
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பிரபல ஊட்டச்சத்து பான நிறுவனமான ஹார்லிக்ஸ் கைமாறியது

Published : Dec 04, 2018 9:17 PM

பிரபல ஊட்டச்சத்து பான நிறுவனமான ஹார்லிக்ஸ் கைமாறியது

Dec 04, 2018 9:17 PM

இந்தியாவின் முன்னணி ஊட்டச் சத்து பானமான ஹார்லிக்ஸ் நிறுவனத்தை யூனிலிவர் விலைக்கு வாங்கி உள்ளது.

இங்கிலாந்தைச் சேர்ந்த கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனத்தால் உலக போரின் இறுதியில் ராணுவ வீரர்களுக்கு ஊட்டசத்து அளிக்க ஹார்லிக்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது.

140 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் கால் பதித்த ஹார்லிக்ஸ், ஊட்டச்சத்து பான சந்தையில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹார்லிக்சை விலை வாங்க யூனி லிவர், கோக கோலா, கிராப்ட் ஹெய்ன்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடும் போட்டியில் ஈடுபட்டன. இதில் வெற்றி பெற்றுள்ள யூனி லிவர் நிறுவனம் 31,700 கோடி ரூபாய் கொடுத்து ஹார்லிக்சை விலைக்கு வாங்கி உள்ளது.

இதன் மூலம் ஹார்லிக்ஸ் மீண்டும் ஒரு இங்கிலாந்து நிறுவனத்திடமே கைமாறி உள்ளது. இந்திய ஊட்டச்சத்து பான சந்தையில் ஹார்லிக்ஸ் விற்பனை 43 சதவிகிதம் என்பதும், கடந்த நிதியாண்டில், ஹார்லிக்ஸ் விற்பனை மூலம் கிளாஸ்கோ ஸ்மித் கிளைன் நிறுவனம் 4200 கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது என்பதும் குறிப்பிடத்தக்கது.