​​ 2017 - 2018 நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் 50 சதவீதம் உயர்வு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
2017 - 2018 நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் 50 சதவீதம் உயர்வு

Published : Dec 04, 2018 8:15 PM

2017 - 2018 நிதி ஆண்டில் வருமான வரி கணக்கு தாக்கல் 50 சதவீதம் உயர்வு

Dec 04, 2018 8:15 PM

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பயனாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரித்திருப்பதாக மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுசில்சந்திரா தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், 2017 - 2018 ஆம் நிதி ஆண்டில் மொத்தம் 6 கோடியே 8 லட்சம் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டில் 11 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் நேரடி வரி வசூல் செய்வது என்ற இலக்கு எட்டப்படும் என்று  நம்பிக்கை தெரிவித்தார்.  பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் கேட்டு விண்ணப்பித்தால், 4 மணி நேரத்தில் இணையம் மூலம் வழங்க திட்டமிட்டுள்ளதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர் சுசில்சந்திரா கூறினார்.