​​ இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் கவாஸ்கர் BCCI மீது குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் கவாஸ்கர் BCCI மீது குற்றச்சாட்டு

Published : Dec 04, 2018 8:11 PM

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் கவாஸ்கர் BCCI மீது குற்றச்சாட்டு

Dec 04, 2018 8:11 PM

மும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெறுவதாக தேசிய தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் கவாஸ்கர் கடுமையாக தாக்கியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி  முன்னாள் கேப்டன் ஆன கவாஸ்கர் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், அபரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ‘‘மும்பையைச் சேர்ந்த சித்தேஷ் லாட்டுக்கு இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை என்றார்.

முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ள அமோல் முசும்தாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை என்று அவர் புகார் தெரிவித்தார். 

மும்பை வீரர்களுக்கு எதிராக மிகப்பெரிய ஓரவஞ்சனை நடைபெறுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அடுத்த ஆண்டாவது இது மாறுமா என பொறுத்திருந்து பார்க்க உள்ளதாக கவாஸ்கர் தெரிவித்தார்.