​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்ற தமது பேச்சு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

Published : Dec 04, 2018 7:47 AM

அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்ற தமது பேச்சு குறித்து ஓ.பன்னீர்செல்வம் விளக்கம்

Dec 04, 2018 7:47 AM

அதிக மதிப்பெண் பெறும் மாணவ-மாணவிகளுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்ற தமது பேச்சு குறித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.

10,11,12ம் வகுப்பு மாணவர்களிடையே மதிப்பெண்களால் ஏற்படும் வேறுபாட்டை போக்கவும் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்கவும் முதல் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் அறிவிக்கப்படாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், தேனியில் நடைபெற்ற விழாவில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், பொதுத்தேர்வில் மாநில அளவிலும் தேனி மாவட்ட அளவிலும் முதல் மதிப்பெண் எடுப்பவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என்று அறிவித்தது குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது குறித்த கேள்விகளுக்கு விளக்கம் அளித்த ஓ.பன்னீர்செல்வம், மாணவர்களை ஊக்குவிப்பதற்காக தாம் தனிப்பட்ட முறையில் தங்கப்பதக்கங்களை வழங்குவதாக தெரிவித்தார்.