​​ கலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை

Published : Dec 03, 2018 4:27 PM

கலந்தாய்விற்கு பயன்படும் வெண் திரைகள், புரொஜெக்டர்கள் சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் எனக் கோரிக்கை

Dec 03, 2018 4:27 PM

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் கலந்தாய்வின் போது பயன்படும் வெண் திரைகள் மற்றும் புரொஜெக்டர்களை சொந்தமாக வாங்கி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் போன்ற மருத்துவம் மற்றும் துணை மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான கலந்தாய்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, அவர்கள் தேர்வு செய்த மருத்துவக் கல்லூரிகள், இன்னும் எத்தனை இடங்கள் காலியாக உள்ளன என்பன போன்ற விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்வதற்காக கலந்தாய்வு நடக்கும் அரங்கிலும், வெளியிலும் 30 இடங்களில் வெண் திரைகள் மற்றும் புரொஜெக்டர்கள் நிறுவப்படுவது வழக்கம்.

இந்த உபகரணங்களை தலா 3 ஆயிரத்து 500 ரூபாய் வாடகைக்கு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வாங்குகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை இதற்கு செலவிடப்படுகிறது. பல்வேறு கலந்தாய்வுகளுக்கும் இதேபோல் வாடகைக்கு உபகரணங்களை வாங்குவதால் பல லட்சம் ரூபாய் வாடகைக்கு மட்டுமே செலவிடப்படுவதாகக் கூறப்படுகிறது.

எனவே செலவீனங்களைக் குறைக்க இவற்றை சொந்தமாக வாங்க வேண்டும் என்றும், எல்.இ.டி. திரைகளை வாங்கி வைத்து நவீனப்படுத்தலாம் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.