​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
750 கிலோ வெங்காயத்திற்கு 1,064 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் பிரதமருக்கு மணி ஆர்டர் அனுப்பி வைத்த விவசாயி

Published : Dec 03, 2018 11:09 AM

750 கிலோ வெங்காயத்திற்கு 1,064 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் பிரதமருக்கு மணி ஆர்டர் அனுப்பி வைத்த விவசாயி

Dec 03, 2018 11:09 AM

750 கிலோ வெங்காயத்திற்கு வெறும் ஆயிரத்து 64 ரூபாய் மட்டுமே கிடைத்ததால் ஆத்திரம் அடைந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த விவசாயி ஒருவர், அந்தப் பணத்தை பிரதமர் மோடிக்கு மணி ஆர்டர் மூலம் அனுப்பி வைத்தார்.

நாசிக்கைச் சேர்ந்த சஞ்சய் சதீ என்ற விவசாயி, தான் விளைவித்த 750 கிலோ வெங்காயத்தை நிபாட் ((Niphat)) நகரில் உள்ள மொத்த விற்பனை சந்தைக்கு எடுத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு கிலோ வெங்காயமானது ஒரு ரூபாய் 40 காசுகளுக்கு மட்டுமே விலை போயுள்ளது.

இதனால் ஆத்திரமுற்ற அந்த விவசாயி, கிடைத்த பணம் ஆயிரத்து 64 ரூபாயை பிரதமரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார். தங்கள் வேதனைகளை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்ததாக அந்த விவசாயி தெரிவித்துள்ளார்.