​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸி., டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு - சச்சின் டெண்டுல்கர்

Published : Dec 03, 2018 11:03 AM

ஆஸி., டெஸ்ட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு - சச்சின் டெண்டுல்கர்

Dec 03, 2018 11:03 AM

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேட்டியளித்த அவர், ஆஸ்திரேலிய மண்ணில் முதல் 35 ஓவர்களை எதிர்கொள்வது மிகவும் சிரமமாக இருக்கும் என்றும், 350க்கும் அதிகமான ரன்களைக் குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். அதேபோல் பந்துவீச்சாளர்களும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுத்து ரன் குவிப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார்.

டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகிய இருவரை நம்பியே ஆஸ்திரேலியா அணி இருந்ததாகவும், தற்போது அவர்கள் இல்லாததால் அணி பலவீனமாகி இருப்பதாகவும் கூறினார். எனவே இந்தத் தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.