​​ இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி

Published : Dec 03, 2018 7:49 AM

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கொல்கத்தாவிடம் சென்னை அணி தோல்வி

Dec 03, 2018 7:49 AM

கொல்கத்தா அணிக்கு எதிரான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்தது.

சென்னையில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில், கொல்கத்தா வீரர் ஜெய்ஸ் ராணா 14வது நிமிடத்தில் முதல்கோல் அடித்தார். இதற்கு சென்னை அணி வீரர் தோய்சிங் பதிலடி கொடுத்து கோல் பெற்றபோதும், பெனால்டி கிக் வாய்ப்பை பயன்படுத்தி லான்சரோட் கோல் அடித்ததால் முதல்பாதியில், கொல்கத்தா அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

80வது நிமிடத்தில் லான்சரோட் மீண்டும் ஒரு கோல் அடித்தார். கடைசி நேரத்தில் சென்னை அணியின் இசாக் கைகொடுத்தபோதும் ஆட்டத்தை சமன் செய்ய முடியவில்லை. இதனால் சென்னை அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. 

10 ஆட்டங்களில் விளையாடியுள்ள சென்னை அணி 5 புள்ளிகளுடன் பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது.