​​ பெங்களூரு கோவிலில் 108 அடி உயர விஷ்ணு சிலை அமைக்கும் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெங்களூரு கோவிலில் 108 அடி உயர விஷ்ணு சிலை அமைக்கும் திட்டம்

Published : Dec 02, 2018 6:36 AM



பெங்களூரு கோவிலில் 108 அடி உயர விஷ்ணு சிலை அமைக்கும் திட்டம்

Dec 02, 2018 6:36 AM

300 டன் எடையுள்ள பிரமாண்ட விஷ்ணு சிலையை 240 டயர்களைக் கொண்ட  லாரியில் திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருவில் உள்ள கோவிலுக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு மருத்துவரான சதானந்தா பெங்களூருவில் உள்ள ஒரு கோவிலுக்கு 108 அடி உயரத்தில் 11 முகங்கள், 22 கைகளுடனும் 7 தலைகளைக் கொண்ட ஆதிசேஷனுடனும் சிலை அமைத்துக்கொடுக்க விரும்பினார். சிலை அமைக்கும் பணிகள் திருவண்ணாமலையை அடுத்த கொரகோட்டை கிராமத்தில் நான்கு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் 300 டன் எடையுடன் 64 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்ட சிலையின் ஒரு பகுதி  240 டயர்களைக் கொண்ட லாரியில் ஏற்றப்பட்ட நிலையில் லாரி டயர்கள் அண்மையில் பெய்த மழை சகதியில் சிக்கிக் கொண்டன. இதையடுத்து மண்ணைக் கொட்டி அந்த இடத்தைப் பலப்படுத்துவதன் மூலம் லாரியை அங்கிருந்து நகர்த்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன