​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சர்ஜிகல் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கான சொத்தாக மோடி மாற்றிவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Published : Dec 01, 2018 4:32 PM



சர்ஜிகல் தாக்குதலை அரசியல் ஆதாயத்திற்கான சொத்தாக மோடி மாற்றிவிட்டார் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

Dec 01, 2018 4:32 PM

ராணுவத்தின் சர்ஜிக்கல் தாக்குதலை தனது அரசியல் ஆதாயத்திற்கான சொத்தாக பிரதமர் மோடி மாற்றிவிட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டுள்ள ராஜஸ்தான் மாநிலத்தில் உதய்ப்பூரில்  ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, உரையாற்றிய அவர், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தில் 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்த வாராக்கடன் அளவு, பாஜக ஆட்சிக் காலத்தில் 12 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

15 முதல் 20 தொழிலதிபர்களுக்கு அரசு கடன்களை தள்ளுபடி செய்துள்ளதாகவும், வங்கிமுறை என்பதே தொழிலதிபர்களுக்கானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மோடி ஆட்சியில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டது போல், மன்மோகன்சிங் ஆட்சியில் 3 முறை சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆனால் மோடியோ ராணுவ வரம்பிலும் தலையிட்டு, சர்ஜிக்கல் தாக்குதலை தனது அரசியல் சொத்து போல மாற்றியிருப்பதாகவும் ராகுல்காந்தி சாடினார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை உண்மையிலேயே ஒரு ஊழல் என்றும், பெரிய நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை உருவாக்கிய முறைகேடு என்றும் அவர் குறை கூறினார். பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட முறையும் பொருளாதாரத்தை சீர்குலைத்து, சாமானியர்களின் முதுகெலும்பை முறித்துவிட்டதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். மத்திய பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தவறிவிட்டது என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.