​​ திருப்பூரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அம்மன் சிலை கொள்ளை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அம்மன் சிலை கொள்ளை

Published : Dec 01, 2018 3:03 PM



திருப்பூரில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள அம்மன் சிலை கொள்ளை

Dec 01, 2018 3:03 PM

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவில் சுவரை உடைத்து அம்மன் சிலை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

பல்லடத்தை அடுத்த இடையர்பாளையத்தில் நீலியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூசாரி நேற்று இரவு 8 மணிக்கு கோவிலைப் பூட்டி விட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு மீண்டும் வந்து கோவிலைத் திறந்துள்ளார். அப்போது கோவிலின் சுற்றுச் சுவர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். கோவிலின் கருவறைப் பூட்டும் உடைக்கப்பட்டு 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள அம்மன் சிலை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும் கோவிலின் உண்டியலும் உடைக்கப்பட்டு அதில் இருந்த காணிக்கையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரின் பேரில் காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.