​​ கோடிக்கணக்கில் கடன்பெற்று தப்பியோடுபவர்களை தடுக்கத் திட்டம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோடிக்கணக்கில் கடன்பெற்று தப்பியோடுபவர்களை தடுக்கத் திட்டம்

Published : Nov 23, 2018 9:36 AM



கோடிக்கணக்கில் கடன்பெற்று தப்பியோடுபவர்களை தடுக்கத் திட்டம்

Nov 23, 2018 9:36 AM

கோடிக்கணக்கில் கடன்பெற்று ஏமாற்றிவிட்டு நாட்டை விட்டு ஓடும் மோசடி பேர்வழிகளுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்களை அளிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவோரின் பட்டியலில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளையும் மத்திய அரசு இணைத்திருக்கிறது.

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி உள்ளிட்டோர், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிவிட்டனர். இவ்வாறு, மோசடி செய்துவிட்டு, வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை வரவழைக்கவும், தப்பியோடுபவர்களை தடுப்பதற்காகவும், லூக் அவுட் நோட்டீஸ் அளிக்கப்படும். இதனை, அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட முக்கிய அமைப்புகளின் பரிந்துரையின்போரில், மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பிக்கும்.

இந்த லுக் அவுட் நோட்டீஸ் வழங்குவதற்கான பரிந்துரைகளை அளிக்க, பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் வழங்கியிருக்கிறது. இதற்கு வழிவகை செய்திடும் வகையில், லுக் அவுட் நோட்டீஸ் அளிக்க பரிந்துரைப்போரின் பட்டியலில், பொதுத்துறை வங்கிகளின் தலைமை செயல் அதிகாரிகள் இணைத்திருக்கிறது.