​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கைது என தகவல்

Published : Nov 19, 2018 5:39 PM

நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் கைது என தகவல்

Nov 19, 2018 5:39 PM

நிசான் நிறுவனத்தின் தலைவர் கார்லோஸ் கோஸ்ன் (( Carlos Ghosn )) நிதி முறைகேடு புகார்களால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

லெபனானிய வம்சாவளியில், பிரேசிலில் பிறந்த அவர், மிச்செலின் நிறுவனத்தில் பணியைத் தொடங்கி ஃபிரெஞ்சுக் குடிமகனானார். அதன் பின் அவர் பணியாற்றிய ரெனால்ட் நிறுவனம், 1999-ல் நிசானின் ஒரு பகுதி பங்கை வாங்கியது.

தற்போது ரெனால்ட் நிறுவனத் தலைமைச் செயலதிகாரியாகவும், நிசான் நிறுவனத் தலைவராகவும் உள்ள கார்லோஸ், ஒரு காலத்தில் திவாலாகும் நிலையில் இருந்த நிசான் நிறுவனத்தை மீட்டெடுத்த பெருமைக்குரியவர்.

இவர், தமது சொத்துக் கணக்குகளை குறைவாக மதிப்பிட்டுக் காட்டிய குற்றச்சாட்டின் கீழ், ஜப்பானில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது தரப்பு இதனை உறுதிப்படுத்தாத நிலையில், பிரான்சில் ரெனால்ட் நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்துள்ளன.