​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்

Published : Nov 18, 2018 10:44 AM

திருப்பூரில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்து சேதம்

Nov 18, 2018 10:44 AM

திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு அடியோடு சாய்ந்து சேதமாகியுள்ளதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

அமராவதி அணை பாசன பகுதிகளான கண்ணாடிப்புத்தூர், நீலாம்பூர், பாப்பான்குளம், பெருமாள் புதூர், சாமராயபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

பல லட்சம் ரூபாய் செலவு செய்து அறுவடைக்குக் காத்திருந்த நிலையில், அப்பகுதியில் நேற்றிரவு வீசிய கடும் காற்று காரணமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சாய்ந்துள்ளன. இதனால் பலத்த சேதத்தைத் சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.