​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர் மற்றும் தஞ்சையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதம்

Published : Nov 17, 2018 11:05 AM



கடலூர் மற்றும் தஞ்சையில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதம்

Nov 17, 2018 11:05 AM

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் தஞ்சையில் கஜாபுயலால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவிலான கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளன. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் கஜாபுயலால் நந்தபாடி, வெண்கரும்பூர், முருகன்குடி, சின்னகொசப்பள்ளம், மாளிகைகோட்டம் ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு சூறாவளி காற்றில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் சேதமாகியுள்ளன. திருக்கானூர்பட்டி, தோழகிரிபட்டி, நாயக்கர்பட்டி, தங்கப்ப உடையான்பட்டி ஆகிய பகுதிகளில் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்ப தயாராக இருந்த கரும்பு பயிர்கள் புயல் காரணமாக அடியோடு சாய்ந்து சேதமாகின.

சாய்ந்துள்ள கரும்பு பயிரை தற்போது ஆலைகளுக்கும் அனுப்ப முடியாத நிலை உள்ளதாகவும், பெரும் இழப்பைச் சந்தித்துள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.