​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி மனு

Published : Nov 12, 2018 8:48 PM

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி மனு

Nov 12, 2018 8:48 PM

நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரயில் கொள்ளையர்களுக்கு அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதிக் கோரி சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சேலம்-சென்னை ரயில் மேற்கூரையில் துளையிட்டு 5 கோடியே 78 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கைதானவர்களில் 5 பேரின் 14 நாள் காவல் முடிந்து சென்னை சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  அவர்களை வருகிற 26-ம்தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும் கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் ஈடுபட்டது எப்படி என்பது தொடர்பான ஆதாரங்களை சிபிசிஐடி போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்த கொள்ளை வழக்கில் கைதான 7 பேரையும் வருகிற 14-ம்தேதி புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு நடத்த அனுமதி கோரிய சிபிசிஐடி போலீசார் மனு மீது, செவ்வாய்க்கிழமைக்குள் உத்தரவு பிறப்பிக்கப்பட வாய்ப்புள்ளது.