​​ வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்

Published : Nov 12, 2018 7:20 AM



வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்

Nov 12, 2018 7:20 AM

கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணையத்தில் வெளியிட்டு உள்ளன. இந்த நான்கு வங்கிகளில் மட்டும், 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன் மோசடி செய்துள்ளனர்.

பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு, கடந்த செப்டம்பர் நிலவரப்படி, நீரவ் மோடி, சோக்சி, விஜய் மல்லையா உட்பட 1,124 பேர், 23 ஆயிரத்து 470 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளனர். ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 11,050 கோடி ரூபாய் பாக்கி வைத்துள்ளனர். பேங்க் ஆப் பரோடாவுக்கு 6,261 கோடி ரூபாயும், சிண்டிகேட் வங்கிக்கு 1,159 கோடி ரூபாயும் கடன்பாக்கித் தொகை செலுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.