​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மயிலாப்பூர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு தகவல்

Published : Nov 01, 2018 12:24 PM



மயிலாப்பூர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக உயர்நீதிமன்றத்திற்கு தகவல்

Nov 01, 2018 12:24 PM

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மாற்றப்பட்டதாக கூறப்படும் மயில் சிலை உள்ளிட்ட சிலைகளின் ஆவணங்கள் அழிந்துவிட்டதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு கடிதம் அனுப்பிய  இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீசுவரர் கோவிலில் புன்னைவன நாதர் சன்னதியில் மயில் சிலை மாற்றப்பட்டுள்ளதாக ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கபாலீசுவரர் கோவில் மயில் சிலை உள்ளிட்ட சிலைகள் தொடர்பான ஆவணங்கள் அழிந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டு  இந்து சமய அறநிலையத் துறையின் கடிதத்தை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். இந்து சமய அறநிலையித்துறையின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ஆவணங்கள் அழிந்தது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவிற்கு உத்தரவிட்டனர்.

இது தீவிரமான பிரச்சனை என்றும் கூறிய நீதிபதிகள், ஆவணங்கள் அழிக்கப்பட்டு விட்டதாக கூறப்படும் புகார் நிரூபணமானால், இந்து அறநிலையத் துறை அதிகாரிகள் கடும் விளைவுகளை சந்திக்க  நேரிடும் எனவும் எச்சரித்துள்ளனர். வழக்கின் விசாரணை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது.