​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உதகை தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலைகள் படுமோசம்

Published : Oct 20, 2018 8:03 AM

உதகை தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலைகள் படுமோசம்

Oct 20, 2018 8:03 AM

உதகை, தொட்ட பெட்டா சிகரத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அப்பகுதிக்கு ஆட்டோவில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் வரும் பயணிகள் சாலைகளில் மிகுந்த சிரமத்துடனும் கவனத்துடனும் வர வேண்டியுள்ளது. ஆங்காங்கே வாகனங்களும் பழுதாகி நின்று விடுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மக்களிடம் வசூலிக்கும் பணத்தைக் கொண்டு தரமான சாலைகளை வனத்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் அமைத்துத் தர வேண்டும் என்று சுற்றுலாப் பயணிகள் கோருகின்றனர்