​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மிதமான மழை

Published : Aug 17, 2018 11:56 AM

கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மிதமான மழை

Aug 17, 2018 11:56 AM

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால், இயற்கை அழகுகளை ரசிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு மழை பெய்துவரும் நிலையில், நேற்று முழுவதும் பலத்த காற்றுடன், மிதமான மழையும் பெய்தது. இதனிடையே குளிரும் வாட்டி வதைத்ததால், சுற்றுலாப் பயணிகள் வெளியில் செல்ல முடியாமல், விடுதிகளிலேயே தங்கியிருந்தனர்.

image

இதனால், குணா குகை, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது. கொடைக்கானல் ஏரியில் படகு சவாரியும் ரத்து செய்யப்பட்டதால், அப்பகுதியே வெறிச்சோடி காணப்பட்டது.