​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக போலீசாருக்கும் உ.பி சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கும் இடையே மோதல்

Published : Dec 27, 2024 2:18 PM

தமிழக போலீசாருக்கும் உ.பி சுற்றுலா பேருந்து ஓட்டுநருக்கும் இடையே மோதல்

Dec 27, 2024 2:18 PM

தமிழக- கர்நாடக எல்லையில் சேலம் மாவட்டம் காரைக்காடு எனும் இடத்தில் தமிழக போலீசாருக்கும் உத்தரபிரதேச சுற்றுலா பயணிகளை ஏற்றிவந்த பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையேயான மோதலில் தலைமை காவலர்கள் இருவர் காயம் அடைந்தனர்.

கர்நாடகாவில் சுற்றுலா முடித்துவிட்டு, மாதேஸ்வரன் மலையை நோக்கிச் சென்ற பேருந்தை கொளத்தூர் சோதனை சாவடியில்  இருந்த தலைமை காவலர்கள் செந்தில் மற்றும் சுகனேஸ்வரன் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மதுபானங்கள் ஏதும் உள்ளதா? பேருந்துக்கு பர்மிட் உள்ளதா என காவலர்கள் கேள்வி எழுப்பியதால், மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது.

மோதலின் போது கடப்பாரையை எடுத்து வந்து தமிழக போலீசாரை உத்தரபிரதேச இளைஞர் ஒருவர் தாக்க முயற்சி செய்த போது அங்கு கூடிய உள்ளூவாசிகள் தாக்கியவர்களை தடுத்து நிறுத்தி காயம்பட்ட போலீசாரை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.