அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவிக்கு நீதி கேட்டு கோவையில் உள்ள வீட்டின் முன்பு தமிழக பா.ஜ.க.தலைவர் அண்ணாமலை தன்னைத் தானே சவுக்கால் அடித்துக் கொண்டார்.
48 நாட்கள் விரதம் இருந்து அறுபடை வீடுகளுக்கு செல்ல உள்ள அண்ணாமலை, மேல்சட்டை இல்லாமல் பச்சை வேட்டி அணிந்தபடி 8 முறை சவுக்கால் அடித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், உடலை வருத்தி ஒரு செயலை செய்யும் போது அதற்குரிய பலன் கிடைக்கும் என்பதால் சாட்டையடி போராட்டத்தில் ஈடுபட்டதாக விளக்கம் அளித்தார்.
லண்டன் பயணத்திற்கு பிறகு தனது அரசியல் பாதை தெளிவாகியுள்ளதாகவும், நிறைய அரசியல் புரிதல் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.