​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிறிஸ்துமஸ் விழாவை ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்

Published : Dec 25, 2024 8:25 AM

கிறிஸ்துமஸ் விழாவை ஆட்டம்பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்

Dec 25, 2024 8:25 AM

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதையொட்டி, கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்தனையில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பணிமயமாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தேவாலயத்தில், நடந்த திருப்பலியில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், வீதிகளில் நடந்த மின்விளக்கு அலகார வாகன ஊர்வலம் மக்களை கவர்ந்தது.