​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடல் நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Published : Dec 22, 2024 10:02 PM

கடல் நீரைக் கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததில் தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

Dec 22, 2024 10:02 PM

தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர், 10 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் இடிந்து விழுந்ததை தொடர்ந்து தினமும் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் அதிகாரிகள், 6 மாதங்களுக்கு முன் கட்டப்பட்ட கால்வாய் சுவர் அதற்குள் எப்படி இடிந்து விழுந்தது என விசாரித்துவருகின்றனர்.