​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Published : Dec 22, 2024 3:20 PM

மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை இல்லை... வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

Dec 22, 2024 3:20 PM

பொள்ளாச்சி மெட்டுவாவி கிராமத்தில் சிப்காட் தொழிற்சாலை தொடங்கும் திட்டம் இல்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி விவசாயிகளுக்கு உறுதி அளித்துள்ளார்.

சிப்காட் தொழிற்சாலை தொடங்க நிலங்களை கையகப்படுத்த நில அளவைப் பணியில் வருவாய்த் துறையினர் ஈடுபட்டுள்ளதாக தகவல் வந்ததால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டங்களை நடத்த திட்டமிட்டிருந்தனர்.

இதனையடுத்து பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.