​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்போரூர் கோவில் உண்டியலில் இருந்த ஐ-போன் முருகனுக்கே சொந்தம் - கோவில் நிர்வாகம்

Published : Dec 20, 2024 6:30 PM

திருப்போரூர் கோவில் உண்டியலில் இருந்த ஐ-போன் முருகனுக்கே சொந்தம் - கோவில் நிர்வாகம்

Dec 20, 2024 6:30 PM

செங்கப்பட்டு மாவட்டம் திருப்போரூர் கந்தசாமி கோவில் உண்டியலில் இருந்த ஐ போன் முருகனுக்கே சொந்தம் என்று கோவில் நிர்வாகிகள் தெரிவித்ததால் அதனை தவற விட்ட பக்தர் ஏமாற்றமடைந்தார்.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கந்தசாமி கோவிலுக்கு வந்த அம்பத்தூரை சேர்ந்த தினேஷ், தனது ஐபோனை தவறுதலாக உண்டியலில் போட்டு விட்டார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை உண்டியலை திறந்த போது, அதில் பணம், நகைகளுடன் செல்போனும் இருந்தது.

கோவில் நிர்வாகிகள் தகவல் தெரிவித்ததை அடுத்து ஐபோனை பெற்றுக்கொள்ள கந்தசாமி கோவிலுக்கு வந்த தினேசிடம், அதில் உள்ள தரவுகளை மட்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியதோடு இந்து சமய அறநிலைய அலுவலகத்தில் மனு அளிக்குமாறு தெரிவித்ததால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.