​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் அட்டூழியம் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயம்

Published : Dec 20, 2024 12:38 PM

சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் அட்டூழியம் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயம்

Dec 20, 2024 12:38 PM

குற்ற வழக்கில் சிறை சென்று வெளியே வந்த தனக்கு போதிய வருமானம் கிடைக்காததால் மீண்டும் சிறைக்கே செல்லலாம் என்ற முடிவுடன் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டா கத்தியால் வெட்டிய இளைஞர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை, அம்பத்தூர் மேனாம்பேடு சாலையில் வியாழக்கிழமை இரவு மதுபோதையில் கத்தியுடன் சுற்றித் திரிந்த நித்திவேல், லோகேஷ் மற்றும் மணிகண்டன் ஆகியோர் கண்மூடித்தனமாக வெட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.

மூவரையும் போலீசார் கைது செய்த நிலையில், நித்திவேல் என்பவர் சிறைக்கு சென்று தொடர்புகளை பிடித்து வெளியே வந்து பெரிய ஆளாக நினைத்து கண்ணில்பட்டவர்களை எல்லாம் கத்தியால் வெட்டியது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.