கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே சாலையின் வளைவில் வலப்புறம் ஏறி வந்த இருசக்கர வாகனம் ஒன்று எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
திற்பரப்பு பகுதியை சேர்ந்த ஸ்ரீஜூ என்பவர் அருமனையில் இருந்து குழித்துறைக்கு சென்று கொண்டிருந்தபோது, அண்டுகோடு தபால் நிலைய வளைவு பகுதியில் ஆபத்தை உணராமல் ஆட்டோவை அதிவேகமாக முந்த முயன்ற போது எதிரே வந்த டூவீலர் மீது மோதியது. இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில் அபி என்ற இளைஞர் உயிரிழந்தார். ஸ்ரீஜூ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.