​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கன்னியாகுமரியில் மனைவியை கொன்ற நபர் தெருநாய் கவ்வி பிடித்ததால் பிடிபட்டார்

Published : Dec 20, 2024 12:04 PM

கன்னியாகுமரியில் மனைவியை கொன்ற நபர் தெருநாய் கவ்வி பிடித்ததால் பிடிபட்டார்

Dec 20, 2024 12:04 PM

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி பேக்கில் அடைத்து எடுத்துச் சென்றவரை தெருநாய் ஒன்று கவ்வி பிடித்ததால் பொதுமக்களிடம் சிக்கினார்.

பால்குளம் வீட்டுவசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மாரிமுத்து, தனது மனைவி மரிய சத்யா ஆண் நண்பர்களுடன் செல்போனில் அதிகம் பேசி வந்ததால் சந்தேகப்பட்டு அடிக்கடி சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று பகல் மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், மரியசத்யாவை கொலை செய்து, நடமாட்டம் இல்லாத பகுதியில் வீசுவதற்காக இரவு நேரத்தில் வெளியே கொண்டு வந்துள்ளார்.

அப்போது அப்பகுதியில் உள்ள வளர்ப்பு நாய் ஒன்று அந்த பைகளை கவ்வி இழுத்து குரைத்த நிலையில், தெருநாய்களும் சேர்ந்து குரைக்கத் தொடங்கியுள்ளன. நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்ததுடன் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

கூலி வேலை செய்து வரும் மாரிமுத்து, அவ்வபோது இறைச்சிக் கடையில் கறி வெட்டும் வேலைக்கும் சென்றுவந்ததாக கூறப்படுகிறது.