​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓமன் துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 2 கோடி கோழி முட்டை.. ஏற்றுமதி சிக்கலை தீர்க்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Published : Dec 20, 2024 9:28 AM

ஓமன் துறைமுகத்தில் தேங்கியிருக்கும் 2 கோடி கோழி முட்டை.. ஏற்றுமதி சிக்கலை தீர்க்க உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Dec 20, 2024 9:28 AM

ஓமன் நாட்டில் ஏற்படுத்தப்பட்ட புதிய நடைமுறையால் நாமக்கல்லில் இருந்து கப்பலில் அனுப்பி வைக்கப்பட்ட சுமார் 2 கோடி கோழி முட்டைகள் அந்நாட்டின் துறைமுகத்தில் தேங்கியிருப்பதாக முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளூரில் முட்டை உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் ஓமன் நாடு இறக்குமதிக்கு திடீரென அனுமதி மறுத்து வருவதாக கூறப்படுகிறது. 60 கிராம் எடை கொண்ட முட்டைகளை மட்டுமே இறக்குமதி செய்ய வேண்டுமென கத்தார் தெரிவித்ததால் அந்நாட்டிற்கான ஏற்றுமதியும் கடந்த 2 மாதமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.