உசிலை 96 வயதில் காலமான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேரன் பேத்திகள் செய்த ஏற்பாடு..!
Published : Dec 20, 2024 6:46 AM
உசிலை 96 வயதில் காலமான பாட்டியின் ஆசையை நிறைவேற்ற பேரன் பேத்திகள் செய்த ஏற்பாடு..!
Dec 20, 2024 6:46 AM
உசிலம்பட்டி அருகே 96 வயதில் உயிரிழந்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்ற , ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வைத்து துக்க வீட்டை, கொண்டாட்டமாக மாற்றி இருக்கின்றனர் அவரது வாரிசுகள்.
96 வயதில் உயிரிழந்த மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பெட்டியை பேத்திகள் சிரித்தபடியே சுற்றிவந்த காட்சிகள் தான் இவை..!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சின்னப்பாலார்பட்டியைச் சேர்ந்த பூசாரி பரமன் என்பவரின் மனைவி நாகம்மாள்., கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பே உயிரிழந்த நிலையில் புதன்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக தனது 96வது வயதில் மூதாட்டி நாகம்மாள் உயிரிழந்தார்.,
மூன்று தலைமுறையைக் கண்ட இந்த முதாட்டிக்கு 2 மகன்கள், நான்கு மகள்கள் வழியாக 78 பேர் பேரன் பேத்திகளாக உள்ளனர். இந்நிலையில் தனது இறப்பிற்கு பின் இறுதி சடங்கு நிகழ்வை மற்றவர்களை போல சோகத்தோடு இல்லாது, ஆடல் பாடல் நிகழ்ச்சியுடன் வெகுவிமர்சையாக கொண்டாடி சந்தோசமாக வழி அனுப்ப வேண்டும் என மூதாட்டி தனது வாரிசுகளிடம் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
மூதாட்டியின் ஆசையை நிறைவேற்றும் வண்ணம், பேரன் பேத்திகள் இணைந்து இன்று ஆடல் பாடல் நிகழ்ச்சி, குடும்ப பெண்களின் கும்மியாட்டம் மற்றும் சிறுவர் சிறுமியரின் நடனம், கிராமிய கலை நிகழ்ச்சி என துக்க வீட்டை கொண்டாட்டமாக மாற்றி இறுதி மரியாதை செலுத்தினர்