​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..

Published : Dec 19, 2024 4:04 PM

மெரினா கடற்கரை சாலையில் 5 நாட்களுக்கு உணவுத் திருவிழா நாளை தொடக்கம்..

Dec 19, 2024 4:04 PM

சென்னை மெரினா கடற்சாலையில் நாளை முதல் வரும் 24ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினரின் உணவுத் திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

40க்கும் மேற்பட்ட அரங்குகளில் மாவட்ட வாரியாக பிரபலமான உணவு வகைகள் சுடச்சுட சமைத்து வழங்கப்பட உள்ள உணவுத் திருவிழாவை காண பார்வையாளர்களுக்கு கட்டணம் எதுவும் இல்லை.

நாளை மாலை 4 மணி முதல் இரவு எட்டரை மணி வரையும், மற்ற நாட்களில் பகல் பனிரெண்டரை மணி முதல் இரவு எட்டரை மணி வரையும் நடைபெற உள்ள உணவுத் திருவிழாவில், விரும்பும் உணவை கட்டணம் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.