திருவண்ணாமலை அருகே வேங்கிக்கால் பகுதியில் சலூன் கடை ஊழியர் அஜித்குமார் என்பவரை தாக்கிவிட்டு தலைமறைவாக இருந்த விசிக நகர பொறுப்பாளர் அருண்குமார், அவரது கூட்டாளி நாகராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அஜித்குமார் அளித்த புகாரின்பேரில் மேலும் இருவரை தேடி வருவதுடன், அவர்களுக்கு உதவியதாக இருந்ததாக நான்கு பேரிடமும் விசாரித்து வருகின்றனர்.