​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விவாகரத்து பெற்ற மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு.. ரூ.80,000-த்தை நாணயங்களாக கொடுத்த கணவன்..

Published : Dec 19, 2024 9:01 AM

விவாகரத்து பெற்ற மனைவிக்கு ரூ.2 லட்சம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவு.. ரூ.80,000-த்தை நாணயங்களாக கொடுத்த கணவன்..

Dec 19, 2024 9:01 AM

கோவை மாவட்டத்தில் கணவன் மனைவிக்கு விவாகரத்து வழங்கிய குடும்ப நல நீதிமன்றம், மனைவிக்கு 2 லட்சம் ரூபாய் ஜீவனாம்சம் கொடுக்க உத்தரவிட்டது.

இதன்பேரில், 80 ஆயிரம் ரூபாயை நாணயங்களாக கொண்டுவந்த கணவன், நீதிபதி முன் கொடுத்துள்ளார்.

இதைப் பார்த்த நீதிபதி, அனைத்தையும், பணத் தாள்களாக வழங்குமாறு உத்தரவிட்ட நிலையில், 20 சாக்கு பைகளில் கொண்டு வந்த நாணயங்களை, கணவன் எடுத்துச் சென்றார்.