திருச்சி ஓலையூர் ரிங்ரோடு பகுதியில் பழுதடைந்திருந்த உயர் அழுத்த மின் கோபுரத்தை சரிசெய்யும் பணியில்
ஈடுபட்டிருந்த இரண்டு ஒப்பந்த மின் ஊழியர்கள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தனர்.
மணப்பாறையை அடுத்த அருணாபட்டியை சேர்ந்த கலாமணி என்பவரும் கல்லுப்பட்டியை சேர்ந்த மாணிக்கமும் மின் கோபுரத்தை பழுது பார்த்த போது தூக்கி வீசப்பட்டு மாணிக்கம் பலியான நிலையில் கலாமணி மின்கம்பத்திலேயே உடல் கருகி மரணமடைந்தாக போலீசார் தெரிவித்துள்ளனர்.