திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைக்கவுண்டம்பாளையத்தில் மர்ம கும்பலால் தாய், தந்தை, மகன் வெட்டிக்கொல்லப்பட்டது தொடர்பாக, அப்பகுதியில் உள்ள 265 கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருவதாக மாவட்ட காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க 14 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் நிகழ்ந்த பெரிய மற்றும் கொடூர குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களின் விவரங்கள் மற்றும் கைரேகைகளை ஒப்பிட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Advertisement